Bible Quiz

 

 

 

வினாடி வினா – 2

02.05.2020. மத்தேயு அதி 15-28 வரை.

1. பேய்களை ஓட்ட உதவும் இரு கருவிகள் யாவை?
2. திருச்சட்டநூலில் உயர்ந்த கட்டளை எது?
3. ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் எனக்கூறிய பெண் யார்?
4. நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தபின் இயேசுசென்றநாடு எது?
5. நூற்றுவ தலைவனின் விசுவாச அறிக்கை எது?
6. இயேசுவை கைது செய்து முதலில் யாரிடம் கொண்டு வந்தார்கள்?
7. பெண் ஒருவர் நறுமணத்தைலம் ஊற்றிய நிகழ்ச்சி யார் வீட்டில் நடைபெற்றது?
8. நெறி தவறியவரை மீட்க வந்தவர் யார்?
9. கொல்கொதா பொருள் தருக….
10. மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் இறுதி வார்த்தை எது?

 

 

வினாடி வினா – 3
03.05.2020. (மாற்கு நற்செய்தி முழுவதும்)

1. தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து……….
என்று கத்தின.
2. கடவுள் ஒருவரே அவரைத்தவிர வேறு ஒரு……….
3. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும் ஆனால்
……….ஒழியமாட்டா.
4. “என் கண்முன்னே நில்லாதே சாத்தானே” யார் யாரிடம் கூறினார்.
5. உலகிலுள்ள எல்லா விதைகளையும் விட
சிறியது……….
6. மாற்குவின் தாய்……….
7. பயணத்திற்கு கைத்தடி தவிர…………… முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துப் போகவேண்டாம்.
8. இயேசு எத்தனை மணிக்கு இறந்தார்.?
9. யோவான் எந்த ஆடையை அணிந்திருந்தார்.?
10. என்மகன் சாகும் தருவாயில் இருக்கிறான் என்று கூறியவர் யார்.?

 

 

வினாடி வினா – 4
04.05.2020. (லூக்கா அதி. 1-12 வரை)

1. உங்களிடம் கேட்கும் எவருக்கும்………….
2. ……………கேட்டு அதை கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர்.
3. சரியாய்ச் சொன்னீர் அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்.   யார்யாரிடம் கூறியது.?
4. ………….உமது நோய் நீங்குக.
5. ……….சொல்லியிருந்தவாறு குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்
6. அறுவடை மிகுதி……….
7. “இதோ என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்.” அதிகாரம் வசனம் தருக.
8. ஆண்டவர் யாருக்கு பெரிதும் இரக்கம் காட்டினார்.?
9. விண்ணுலகத்திலிருக்கிற எங்கள் தந்தையே, அதிகாரம் வசனம் தருக.

10. பேய்களின் தலைவன்…………….

 

வினாடி வினா – 5
05.05.2020. (லூக்கா அதிகாரம் 13-24 வரை)

1. உயிர்த்தெழுதலை மறுப்பவர்……………..
2. நீ யூதரின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள் என்று எண்ணி நகையாடியவர்…………..

3. ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? யார்யாரிடம் கூறியது?

4. எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஒன்று……………உள்ளது

5. நாம்……..நீங்கள்போய்ஏற்பாடு செய்யுங்கள்.

6. இயேசுவைக்காணநெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தவர் யார்.?

7. இயேசுவின்பொருட்டுநண்பர்கள் ஆனவர்கள்யார்.?

8. இயேசுவை விடுதலை செய்ய விரும்பியவர் யார்.?
9. லூக்கா ஒரு……………..
10. எந்த மொழியில் லூக்கா நற்செய்தி எழுதப்பட்டது.?

 

 

வினாடி வினா – (6)
06.05.2020. (யோவான் அதிகாரம் 1-11வரை)

1. எருசலேம் ஆலயத்தை கட்ட எத்தனை ஆண்டுகள் ஆயின…………
2. திருச்சட்டத்தை பெற்றுக்கொடுத்தவர்
யார்…?
3. மார்த்தா மரியா இவர்
களின் ஊர் எது?
4. நத்தனியேல் எவ்வாறு இயேசுவால் அழைக்கப்பட்டார்?
5. அப்பங்கள் கொண்டு
வந்த சிறுவனை இயேசுவிடம் அழைத்து
வந்தவர் யார்?
6. மகன் தாமாக எதையும் செய்ய இயலாது…..அதிகாரம்,
வசனம் தருக.
7. அவர்கள் உண்பதற்கு
வானிலிருந்து உணவு
அருளினார்….எதில் எடுக்கப்பட்டுள்ளது
8. 1-11 அதிகாரங்களில்
எத்தனை மலைகள்
குறிக்கப்பட்டுள்ளன?
அதி., வசனம் தருக…
9. நாங்கள்………..வழி மரபினர் ஆயிற்றே.
10. இலாசர் இறந்து
எத்தனையாவது நாளில்
இயேசு உயிர் கொடுத்தார்?

 

வினாடி வினா – (7)
07.05.2020. (யோவான் அதிகாரம் 12-21 வரை)

1. இயேசுவை யார்
காண விரும்பினார்கள்?
2. “யாரை தேடுகிறீர்கள்”
அதிகாரம் வசனம் தருக.
3. நான் உங்களோடு
இணைந்திருப்பது போல…………..
4. இயேசுவின் அன்பு சீடர்……………..
5.”மக்களுக்காக ஒருவர்
மட்டுமே இறப்பது நல்லதுதல்ல” யார் யாரி
டம் கூறியது?
6. திருடன் ….எந்த அதிகார வசனத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது?
7. என்னோடு உண்பவனே……………
8. ஏதாவது பறவையின்
பெயர்…… அதிகாரம்,
வசனம் தருக.
9. ஏதாவது ஒரு எண்…..
அதிகாரம், வசனம் தருக.
10. ‘பெற்றுள்ளார் அவர்
இப்போது மாட்சி வழியாக பெற்றுள்ளார்
மாட்சி மானிடமகன் கடவுளும்”
சரியான வாக்கியம் தருக.

 

 

வினாடி வினா – (8)
08.05.2020 (திருத்தூதர் பணிகள் முழுவதும்)

1. யூதாசுக்கு பதிலாக
தேர்ந்தெடுக்கப்பட்ட
திருத்தூதர் யார்?
2. சீடர்கள் முதன் முறையாக கிறிஸ்தவர்
கள் என அழைக்கப்பட்ட
இடம் எது?
3. பவுல் மெய்யியல்
அறிஞர்களோடு கலந்து
ரையாடிய இடம் எது?
4. பவுல் கல்வி பயின்ற
இடம்………….
5. திருத்தூதர் பணிகள்
நூலின் பெயர் என்ன?
அதன் ஆசிரியர் யார்?
6. பர்னபா பொருள் தருக…..
7. பவுலின் மனமாற்றம்
குறிப்பிடப்பட்டுள்ள
மூன்று இடங்கள் எவை?
8. ஸ்தேவானுக்கும், இயேசுவுக்கும் உள்ள
ஏதாவது ஒரு ஒற்றுமை?
9. யோவானின் சகோதரன் யாக்கோபை
கொன்றது யார்?
10. இந்நூலில் அன்னை மரியாவைப்பற்றி குறிப்
பிடப்பட்டுள்ள பகுதி எது? அதிகாரம், வசனம்
தருக….

 

 

வினாடி வினா – (09)
09.05.2020
(உரோமையர்)

1. எது நம்மை மனமாற
விடவில்லை?
2. யார் வழியாக பாவம்
உள்ளே நுழைந்தது?
3. மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்
அதிகாரம் வசனம் தருக.
4. அவர்மீது நம்பிக்கைக்
கொண்டோர்…………….
5. கெங்கிரேயாவின்
திருத்தொண்டர் யார்?
6. ஆசியாவில் முதன்
முதலில் கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டவர் யார்?
7. பழிவாங்குவதும்
கைம்மாறு அளிப்பதும்
யாருக்கு உரியது?
8. ஆபிரகாம் நம் அனை
வருக்கும்…………….
9. உரோமையர் நூலின்
ஆசிரியர்……………….
10. பவுல் தன்னை
எவ்வாறு அறிமுகம்
செய்கிறார்?

 

வினாடி வினா – (10)
10.05.2020
(1 கொரிந்தியர்)

1. நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து
என்னை அனுப்பினார்…
அதிகாரம், வசனம் தருக
2. “கடவுள் ஒருவரன்றி
வேறு தெய்வங்கள்
இல்லை”……….
அதிகாரம் வசனம் தருக.
3. ………….எல்லாவற்றையும் செய்கிறேன்.
4. “மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள
அனைத்தும் ஆண்டவரு
டையன”………..
அதிகாரம்,வசனம் தருக
5. வழிபாட்டில் பெண்கள் முக்காடு அணிவது எந்த அதிகாரத்தில் உள்ளது?
6. உடல் ஒன்றே; உறுப்புகள் பல…………….
7. அன்பைப்பற்றி விவரிக்கும் அதிகாரம்,
வசனம் தருக.
8. கொரிந்தியர் புத்தகத்
தின் ஆசிரியர்?
9. யாரைக்குறித்து பெருமை பாராட்டலாகாது?
10. இந்த நூல் எப்பொழுது எழுதப்பட்
டது?

 

வினாடி வினா – (11)
11.05.2020
(2 கொரிந்தியர்)

1. தகுந்த வேளையில் நான் உமக்குப் பதில்
அளித்தேன். அதிகாரம்,
வசனம் தருக….
2. நான் உங்களுக்கு……..
நீங்கள் எனக்கு…………..
3. யார் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள்?
4. பவுலடியார் தன்னை
எவ்வாறு அறிமுகம்
செய்கிறார்?
5. ஏன் பவுலின் மனம்
அமைதியின்றி தவித்தது?
6. பழையன கழிந்து………………………..
7. இறுதியாக பவுல்
கூறிய அறிவுரை……………
8. இந்த மடல் எதை தெளிவாக எடுத்துரைக்கிறது?
9. இந்த மடல் எழுதப்பட்ட ஆண்டு?
10. இத்திருமுகத்தின்
நோக்கம் என்ன?

 

வினாடி வினா – (12)
12.05.2020
(கலாத்தியர், எபேசியர்
முழுவதும்)

1. ………உருவாகும்வரை உங்களுக்காக நான்
மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.
2. எது அவரது கடல்.?
3. நன்மை செய்யும் ஒவ்வொருவரும் பெறுவது என்ன?
4. யாருடைய துணையால் நாம் வாழ்கிறோம்?
5. கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட ……………அணிந்து கொள்ளுங்கள்.
6. நாம் எவற்றை செய்ய
கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்
பட்டிருக்கிறோம்?
7. திருச்சபையின் தூண்கள் யார்?
8. நான் இயேசுவுக்கு
அடிமை என்பதற்கான
அடையாளம் என்ன?
9.அன்பே உங்கள்
வாழ்வுக்கு………………..
10. “இனி உங்களிடையே யூதர்
என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக்
குடிமக்கள் என்றும் இல்லை…” என வரும்
பகுதி (அதிகா. வசனம்)

 

வினாடி வினா – (13)
13.05.2020
(பிலிப்பியர், கொலேசியர்)

1. யாரிடம் ஞானத்தோடு
நடந்து கொள்ள வேண்டும்?
2. கிறிஸ்து இயேசுவைப் பற்றிய
அறிவே………………….
3. கிறிஸ்துவக்காகவே
நான்…………………..
4. கிறிஸ்து எதற்காக
வேதனையுற்றார்?
5. கடவுளால் தேர்ந்து
கொள்ளப்பட்டவர்கள்
தங்களை எத்தகைய
பண்புகளால் அணி
செய்ய வேண்டும்?
6. ………மனநிறைவோடு
இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.
7. கிறிஸ்துவில் மறைந்துள்ள செல்வங்கள் எவை?
8. யாருடைய மனநிலை
நம்மிலும் இருக்க வேண்டும்?
9. நமக்கோ விண்ணகமே…………….
10. பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் யார்?

 

வினாடி வினா – (14)
14.05.2020
(1, 2 தெசலோனிக்கர்)

1. பவுல் எழுதிய முதல்
திருமுகம் எது?
2. பவுலடியார் நாங்கள் என்று யாரை குறிப்பிடுகிறார்?
3. யாருடைய நம்பிக்கையை கண்டு பவுல் ஆறுதல் அடைந்தார்?
4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை எது? (ஏதாவது ஒன்று)
5. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக….அதிகாரம்,
வசனம் தருக..
6. நாங்கள் உங்களுக்காக இறைவனிடம் என்றும் வேண்டுகிறோம்….. அதிகாரம், வசனம் தருக…..
7. யார் தீர்ப்புக்கு உள்ளாவர்?
8. யாரோடு பழகாதிருக்கவேண்டும்?
9. உழைக்க மனமில்லா எவரும் உண்ணலாகாது?
அதிகா., வசனம் தருக..
10. ‘போலி’ என வரும் இறைவார்த்தை தருக…

 

வினாடி வினா – (15)
15.05.2020
(திமொத்தேயு 1 & 2)

1. மறைநூல் அனைத்தும்………………பெற்றுள்ளது.
2. ஒரு பெரிய வீட்டில்
இருப்பன எவை?
3. திருச்சபை உண்மைக்குத்……………..,
………….இருக்கிறது.
4. எவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன் மாதிரியாய் விளங்கவேண்டும்?
5. கிறிஸ்து இயேசு ஏன் இவ்வுலகிற்கு வந்தார்?
6. கைம்பெண்கள் செய்ய வேண்டிய நற்செயல்கள்?
7. கடவுள் நமக்கு எத்தகைய உள்ளத்தினை வழங்கியுள்ளார்?
8. “சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவித்தார்” அதிகாரம், வசனம் தருக…
9. யார் ஒருவரே சாவை அறியாதவர்?
10. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே இணைப்பாளர் யார்?

 

வினாடி வினா – (16)
16.05.2020
(தீத்து, பிலமோன்)

சரியான விடையை பொறுத்துக.

1. நற்செயல்கள் – எவரையும் பழித்துரைக்காதே
2. அறிவுரை – தண்டனை தீர்ப்பளித்து
கொண்டபாவிகள்.
3. தீத்து – அடிமை
4. வயது முதிர்ந்த ஆண்கள் – ஒரு மனைவி
5. பிலோமோன் – உடன் உழைப்பாளர்
6. ஒனேசிம் – கட்டுப்பாடு
7. மூப்பர்கள் – பிற இனக்கிறிஸ்தவர்
8. மாற்கு – மக்களுக்கு பயன்டும்
9. நெறிதவறியோர் – அன்பும் மனஉறுதியும்
10. இளைஞர்கள் – செல்வந்தர்

 

வினாடி வினா – (17)
17.05.2020
(எபிரேயர்)

1. “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே”
அதிகாரம், வசனம் தருக
2. இத்திருமுகம் எழுதப்பட்டுள்ள காலம்?
3. ……….., ……….அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.
4. எதன் வழியாகத் திருத்தூயகத்துள் நுழைய நமக்குத் துணிவு உண்டு?
5. இன்று நீங்கள் அவரது குரலைக்………..
எனத் தொடங்கும் இறைவார்த்தையை எழுதுக…
6. ……..பகிர்ந்து வாழவும்
மறவாதீர்கள்.
7. யார் மூலம் உன் வழிமரபு விளங்கும்?
8. நான் அவருக்கு………..,
அவர் எனக்கு…………. .
9. பலியாக படைத்த இரத்தம் யாருடையது?
10. நம் ஆண்டவர் ………..
போன்றவர்.

 

வினாடி வினா – (18)
18.05.2020
(யாக்கோபு)

1. யாக்கோபு திருமுகம் யாருக்கு எழுதப்பட்டது?
2. சோதனையை………….
தாங்குவோர் பேறுபெற்றோர்.
3. யாரை அவமதிக்க கூடாது?
4. ஆசிரியர் நாவை எதோடு ஒப்பிடுகிறார்?
5. கடவுள் எதற்காக பேராவலோடு ஏங்குகிறார்?
6. யாருடைய தாராள மனத்தைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார்?
7. யாருடைய மன்றாட்டு பயன் விளைவிக்கும்?
8. “உயிர் இல்லாத உடல்
போல செயலில்லாத நம்பிக்கையும் செத்ததே” (அதிகாரம், வசனம் தருக.)
9. …………நம்பிக்கை என
வரும் இறைவார்த்தை எழுதுக.
10. யாக்கோபு திருமுகத்தின் மையக்கருத்தாக நீங்கள் நினைப்பதை ஒரு வரியில் எழுதுக.

 

வினாடி வினா – (19)
19.05.2020
(பேதுரு 1 & 2)

1. இத்திருமுகம் யாருக்கு எழுதப்பட்டது?
2. “நீங்கள் தூயவராயிருங்கள்; ஏனெனில் நான் தூயவன்” ….(அதிகாரம், வசனம் தருக.)
3. நீதியுள்ளவராகிய…….
………….. அவர் இறந்தார்.
4. …………..கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.
5. யார் அழிவை தம்மீது வருவித்துக்கொள்வார்
கள்?
6. ஆண்டவரின் பார்வையில் ஒருநாள்
……….போலவும்…………..ஒருநாள் போலவும் இருக்கும்.
7. யார் தண்டனை பெறுவது திண்ணம்?
8. தாழ்நிலையில் உள்ளவருக்கோ
கருணை காட்டுவார். (அதிகாரம், வசனம் தருக.)
9. சாரா ஆபிரகாமை எவ்வாறு அழைத்தார்?
10. பேதுரு திருமுகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடத்தை ஒரு வரியில்
எழுதுக.

 

வினாடி வினா – (20)
20.05.2020
(யோவான் 1, 2 & 3 மற்றும் யூதா)

1. யார் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல?
2. எத்திருமுகத்தில் ஆசிரியர் தன்னை ஒரு மூப்பர் என சொல்கிறார்?
3. எவை மூன்றும் ஒரே
நோக்கம் கொண்டவை?
4. யார் பொய்யர்?
5. எது அன்புக் கடிதம்?
6. ஒருவர் மற்றவரிடம்…..
செலுத்துவோம்.
7. எந்த திருமுகம் போலிப்போதகர்கள் பற்றி கூறுகிறது?
8. யார் கடவுளிடமிருந்து
பிறந்தவர்கள்?
9. …………….இரக்கம் காட்டுங்கள்.
10. சட்டத்தை மீறுவதே……………

 

வினாடி வினா – (21)
21.05.2020
(திருவெளிப்பாடு 1முதல் 11 வரை)

1. திருவெளிப்பாட்டின்
ஆசிரியர் யார்?
2. திருவெளிப்பாடு எந்த
வெளிப்பாட்டை உணர்த்துகிறது?
3. “அஞ்சாதே முதலும் முடிவும் நானே” (அதிகாரம், வசனம் தருக)
4. கேட்கச் செவியுடையோர் திருச்சபைக்கு………………
கூறுவதை கேட்கட்டும்.
5. ஏதாவது ஒரு எண் எழுதுக.
6. இஸ்ராயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர் கள் எண்ணிக்கை…………
7. அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும்………..மீட்பு வருகிறது.
8. போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல்
அந்த……………….
9. குதிரைப்படையின்
எண்ணிக்கை எத்தனை?
10. “இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்” (அதிகாரம், வசனம் தருக.)