சின்ன ரோமாபுரி

தென்பாண்டிய சீமையின், தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் இனிய தென்றல் வீசும் திருநெல்வேலி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காவல்கிணறு விலக்கிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் கிழக்கில் அமைந்துள்ள அழகிய ஆரோக்கியமான ஊர்தான் வடக்கன்குளம்.

இன்று இவ்வூர் சுமார் 15000 மக்கள் தொகை கொண்ட நடுத்தர கிராமமாக இருப்பினும் சிறந்த நாகரீகப்பண்பிலும் சிறந்து விளங்கும் ஒரு நகரமாகவே நிகழ்கின்றது. நறுமணம் கமழும் பூஞ்சோலைகளும் பொலிவுடன் தோற்றமளிக்கும் தோப்புகளும், குளமும் சூழ்;ந்து செல்வம் செழித்தோங்கும் நகரம் இது என்று சொல்வதில் வியப்பில்லை.

இன்யை வடவையைப் பார்த்தாலே கண்ணைக் கவர்வதாய் அமைந்துள்ளது, பலவகையான கட்டிடங்கள் நிறைந்து, ஊரின் நடுப்பகுதியில் கம்பீரமாக நிற்கும்  “இறை மைந்தன் யேசுவைப் பெற்றெடுத்த தாய் அன்னை மரியாள் குடி கொண்டிருக்கும் திருக்குடும்ப பேராலயம்” நவீன முறையில் தோன்றும். இந்தியாவிலேயே முதல் வேதசாட்சியான தேவசகாயம் பிள்ளைக்கு ஞானஸ்னானப் பாலூட்டிய புனித வடவை. முத்து நகர் மறைமாவட்டம் கிறிஸ்தவர் எண்ணிக்கையிலும் புனிதர்களின் பொற்பாதங்கள் பட்ட இடங்களாலும் பெருமை படைத்தது. அதிலும் வடக்கன்குளம் பல புதுமை நிகழ்ச்சிகள் நடந்த இடம். புனிதர்கள் அருளானந்தர், தீந்தமில் தேம்பாவனி படைத்த வீரமாமுனிவர் போன்றோர் காலடி பதிந்த புண்ணிய பூமியாகும்.

உலகில் இதைவிடப் பெரிய பெரிய ஆலயங்கள் உண்டு. ஆனால் சரித்திர சிறப்புப் பெற்ற ரோமாபுரியின் பேராலயம் போன்று அழகும் வடிவமைப்பும் கொண்ட ஆலயம் இதை தவிர வேறு எங்கேயும் காண்பது அரிது: மேலும் புனிதர்கள் பலர் இங்குத் தங்கி, பல தியாகங்கள் புரிந்து திருச்சபை வளர்ச்சியடைய அரும்பாடுபட்டுள்ளார்கள். இந்த ஊரார் ஆதியிலிருந்தே கிறிஸ்துவ பண்பாட்டில் வளர்ந்தவர்கள். அந்தக்காலத்திலேயே இவ்வூரைச் சின்ன ரோமாபுரி என்று மேநாட்டுப் போதகர்கள் சொல்வதுண்டு. எனவே இந்த வடக்கன்குளத்துக்கு “சின்ன ரோமாபுரி” என்ற சிறப்புப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்கின்றேன் என்று 1926 -ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் மாதாவின் திருவிழா 9ம் நாள் மாலை ஆராதனை முடிந்த பின்பு அன்றைய பங்கு தந்தை சங். இஞ்ஞாசியார் அடிகளார் மற்றும் பல குருக்கள் முன்னிலையில் வணக்கத்துக்குரிய ஆயர் ரோச் ஆண்டகை அவர்கள் பொது மேடையில் பிரகடனம் செய்துள்ளர்கள்.

கி.பி. 1439 ஆம் ஆண்டிலேயே கொச்சி முதற்கொண்டு கன்னியாகுமரி வரையும், கன்னியாகுமரியிலிருந்து சென்னை மயிலை வரையும் கிறிஸ்தவர்கள் பரவலாகவே வாழ்ந்திருந்தார்கள். கிறிஸ்துவின் அன்பு சுவட்டில் உட்புகுவோர் துன்பம் துயரமில்லாத பேரின்ப நிலை அடைவர் என்ற உண்மைக் கருத்தைப் பரப்பிட இந்தியா வந்தவர்தான் இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தோமையார்.

சென்று போதியுங்கள், ‘இதோ உலகம் முடியும் நாள் வரை உங்களோடு கூட இருப்பேன்’ என்ற இயேசு பெருமானின் அன்பு வார்த்தைகளைச் சுமந்து இந்தியா வந்த தோமையார், ஆன்மீகப் பணியையும், மேய்ப்புப் பணியையும் திறம்படவே செய்தார். அந்நாட்களில் தோமையாரின் பணிகளைக் கண்டு பொறாமை கொண்ட விரோதிகள் (பிறசமய தீவிரவாதிகள்) அவரை பரங்கிமலையில் (சென்னையில்) ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர். அக் குன்றின் பெயர் இன்று வரை “செயின்ட் தாமஸ் மௌன்ட்” என்று அழைக்கப்படுகின்றது.

கீழ்திசை நாடுகளில் மறைபரப்புப் பணியைச் சிறப்பாகச் செய்திட கி.பி. 1542ல் சேசுசபைக் குருக்களில் தளபதியான புனித இஞ்ஞாசியாரிடம் போர்த்துக்கல் அரசர் கேட்டுக் கொண்டார். எனவே, தமது மாணவரும் தமது வலக்கரமாக விளங்கியவருமான புனித சவேரியாரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார் புனித இஞ்ஞாசியார்.

இந்தியாவுக்கு ஆண்டவரின் வார்த்தைகளைத் தாங்கி வந்த புனித சவேரியார், இந்தியாவில் பல இடங்களில் மறைபரப்புப் பணியை திறம்படச் செய்தார். சவேரியாரின் மறைவிற்குப்பின்னர் சேசு சபைக்குருக்கள், பாரிஸ் வேத போதக சபைக் குருக்கள் போன்றோரின் பணிகளால் இந்தியாவில் கிறிஸ்தவம் தழைத்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. அவ்வாறு முற்றிலும் கிறிஸ்துவ மயமாகிய ஊர்களில் முத்துக்குழித்துறை (தூத்துக்குடி) மறைமாவட்டத்தில் உள்ள அணக்கரையும் ஒன்று.

சாந்தாயி வருகையும், சமயம் வளர்தலும்

கி.பி. 1680ல் அணக்கரையின் அருகிலிருக்கும் தோப்புவிளை என்ற ஊரிலிருந்து சாந்தாயி அம்மையாரும் அவரது கணவரும், குழந்தைகளும் இங்கு வந்து குடியேறினர். வீடுகட்டி வாழ்ந்தனர். சாந்தாயி அம்மையார் மிகுந்த இறைபக்தி கொண்டவள், இறை வழிபாடு செய்வதற்கு ஓலையிலாள ஒருசிறு செபக்கூடத்தைக் கட்டி இறைவனை துதித்து வந்தனர். தேவதாயின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட அம்மையார் மாதாவின் புனித இடமாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஒரே இடத்தை மேம்படுத்தினாள். நல்வழியில் வாழ வேண்டும் என்ற நல்லலெண்ணம் கொண்ட அம்மையார் அனுதினமும் அன்னையின் அருள்மழையில் நனைந்தனள். நல்லொழுக்கமும, தெய்வீக அருளும் அம்மையாரிடம் நிரம்பவே இருந்தன. இயன்ற மட்டும் இறைமதத்தை போதித்து வந்தாள்.

அருளானந்தரின் பணியும் ஆன்மீக வளர்தலும்

220px-jean_de_brito_1647-1693_2

ஜாண்பிரிட்டோ என்ற அருளானந்தர் போர்த்துகல் நாட்டில் லிஸ்பன் நகரில் தந்தை சால்வதே தே பிரிட்டோ, தாய் டோனா ஆகியவர்களுக்கு 1647ம் ஆண்டில் பிறந்தார். கி.பி.1684 முதல் 1685 வரை காமநாயக்கம்பட்டியில் பங்குக் குருவாகப் பொறுப்பேற்று இறைபணியாற்றினார். அதன்பின்பு பங்குகளைக் கவனிக்கும் பொறுப்பு ஏற்று சீ;டராகப் பணியாற்றினார் 1686 வடக்கன்குளத்துக்கு வந்து ஆக்கப்பணிகளையும் கவனித்தார். இந்த ஊருக்கு ஒருசிறு கோயிலைக் கட்டிகொடுத்து மக்களை தெய்வீக வழியில் ஊக்குவித்தார். சந்தாயின் திருப்பணியும் விரிவடைந்தது. அருளானந்தரின் விசுவாசத் தென்றலும் வீச ஆரம்பித்தது. காமநாயக்கம்பட்டியின் கிளைக் பங்காக வடக்கன்குளத்தை நியமனம் செய்தார்.

நேமன் மி~னுடன் இணைப்பு

1708ஆம் ஆண்டு சங். சைமன் கார்வெல்லோ அடிகள் காலத்தில் இவ்வூரை மதப் போதங்கர்கள் தங்கும் இடமாகத் தெரிவு செய்துகொண்டனர். ஏனெனில் போதகர்கள் கொச்சியிலிருந்தும், காமநாயக்கம்பட்டி முதலிய இடங்களிலிருந்தும் வருபவர்கள் பலபாகங்களுக்கு போவதும் வருவதும் இவ்வழியே. ஐசமன் கார்வேல் சுவாமிகள் காலத்தில் காமநாயக்கனபட்டியின் கிளைப்பங்காக இருந்த வடக்கன்குளம் நேமன் பங்குடன் இணைக்கப்பட்டது. (அதாவது தென்னகத்தில் இறைபணி புரிவதற்கு ஒரு தனிப்பங்கு நேமன் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இணைக்கப்பட்டதுதான் வடக்கன்குளம்). வடக்கன்குளத்திற்கு கிளைப்பங்காக பொறுப்புகள் கொடுத்த போதிலும் சில மேல்மட்ட பொறுப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

வீரமாமுனிவர் வருகை

rev-_fr-_constantine_joseph_beschi_s-j_veeramamuniver

இத்தாலி நாட்டில் மந்துவா என்ற இடத்திற்கு அருகே வேர்ஜில், காஸ்திக் கினியோனே என்ற சிற்றூரில் பெரும் நிதி செல்வந்தருமான கொண்டால்போ பெஸ்கி என்பவருக்கும், எலிஸபெத் என்ற மங்கையருக்கும் கி.பி. 1680ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கி என்பது இவரது இயற்கைபெயர். கி.பி. 1709ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் குருப்பட்டம் பெற்று 1711ல் யேசு சபைமூலமாக இந்தியா வந்து சேர்ந்தார். மதுரை மி~னுடன் இணைந்து இறைபணியாற்றினார். அப்பிரதேசங்களில் அரசியல் கொந்தளிப்பு கிறிஸ்துவ மதத்திற்கு விரோதமாக நடந்து கொண்டிருந்தகாலம். அச்சந்தர்ப்பத்தில் பலமுறை, கத்தோலிக்க சமயத்திலிருந்து விலகும்படியாக வாள்முறையில் கத்தோலிக்க மக்கள் நிர்ப்பந்தப்பட்டிருக்கின்றார்கள். வீரமாமுனிவர் இது தொடர்பாக பலமுறைகள் சிறை சென்றுள்ளார். தமிழ் மொழி மீது அன்பும் ஆர்வமும் கொண்டவர். சமயத் தொண்டோடு சமூகத் தொண்டிலும் ஈடுபட ஆர்வம் கொண்டார். தமிழ் நன்கு பயின்று பண்டித்தியம் பெற்றவர். திறமைவாய்ந்த புலவர்களின் படைப்புகளுக்கு நிகரான சிறந்த பாடல்களை புனையும் அளவுக்கு நிகரான சிறந்த தமிழைப்பயின்றவர். அவர் ஒரு தமிழ் ஒரு சிறந்த இலக்கிய மேதையாகவும், முன்னணி ஆராய்ச்சியாளராகவும் கருதப்பட்டவர்.
புனித சூசையப்பரின் புகழை எடுத்தோதும் வாடாத கவிமாலை என்ற இவரது கவிதை கொண்டு இவர் உருவாக்கிய தேம்பாவனி என்ற காவியம் விவிலியத்திலுள்ள பல நீதி கதைகளை எடுத்துக்கூறும் கவிகள், பாடல்கள் முதலியவைகளை சாதாரண மக்கள் பொருள்பட அறிவதில் உண்டாகும் கஷ்டங்களைக் கண்டுணர்ந்த வீரமாமுனிவர் பெரிதும் வேதனையடைந்தாh.; தமிழ் தோன்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளில் எத்தனையே புலவர்கள் தோன்றி மறைந்த இந்த தமிழகத்தில் சாதாரண மக்கள் கவிபாடல்களை பொருள்பட் அறிவதற்கு ஒரு தமிழ் அகராதியை இப்பெரியவர்கள் உருவாக்கவில்லையே என வருந்தினார். எனவே தாம் ஆர்வம் கொண்டு தமிழ் அகராதியை உருவாக்கி வெளியிட்டார். தமிழ் கவிஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் அரசர்களும் வீரமாமுனிவரைப் பாராட்டினர். (முதன் முதலாக தமிழ் அகராதியை உருவாக்கி வெளியிட்டவர் வீரமாமுனிவர் என்று அரசு வராலாறுகளில் முத்தால் பொரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). “கவிநலம் சான்ற இனிய மொழிகளால் பாடிய பாடலைப் பாடும்போது. அது நமது ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இருக்கின்றது” என்று கவிஞர்கள் பலர் கூறுவதுண்டு. அரசியல் சூழ்நிலையில் படாத பாடுகள் பட்டும், ஆத்மீக வாழ்வோடு கூடவே தமிழ் மக்களின் மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்று பண்டித்தியம் அடைந்தார் என்பது ஆச்சரிப்படக்கூடியது. இவர் தமிழ் ஞானிகளைப் போல் காவியம் உடுத்திப் புலித்தோலை விரித்து பூஞ்சிலியில் அமர்ந்து இறைவனை செபிப்பார்.

our-lady-of-assumption-church

கி.பி. 1713முதல் 1715 வரை காமநாயக்கம்பட்டியில் பங்கு குருவாகப் பணியாற்றினார். அங்கு இருக்கும் போது வடக்கன்குளத்துக்கு அடிக்கடி வந்து இங்குள்ள பங்கு குருக்களுடன் உறவாடி இந்த பகுதியிலும் இறைபணிகளைச் செய்தவர். வேதவிரோதிகளால் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை அகற்றிடவும், மக்கள் புத்துணர்வு பெறவும் இரவு பகலாக இறைவனிடம் மன்றாடியவர். எந்த சமய சமூகத்தவராக இருப்பினும் அல்லல்படுகிறவர்களுக்கு உதவிட துணிந்து முன் வருபவர். கடவுள் பணிக்கு தம்மை உரிமைப்படுத்தியவர். எத்தனை முட்டுக்கட்டைகளிருந்தாலும் அஞ்சாமல், மனம் தளராமல் தலைநிமிர்ந்து நீதி நேர்மையாகப் போராடும் குணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்.

முகமதியர் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதும் நாடாண்ட பரம்பரையினர் சிதருண்டனர். தங்களது சொந்த நாட்டை இழந்து மனம் நொந்து பல திக்குகளிலும் ஓடி மறைந்து வாழ்ந்தனர். வாழவகையறியாது திண்டாடும் சிலரைக் கண்ட வீரமாமுனிவர் அவர்களை வடக்கன்குளத்துக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து ஆதரித்து வந்தார். (கான்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கி என்பவர் தைரியநாதர் என்ற தமிழ் பெயர் கொண்டு வீரமாமுனிவர் என்ற விழுமிய பெயரால் வரலாறு படைத்தவர்.