திருக்குடும்ப ஆலய அமைப்பு

church-alter-3

இந்த ஆலயம் முக்கோண வடிவம். ஓவல் வடிவமாகவும் தோன்றும், பீடத்தில் நின்று பார்க்கும்போது யு வடிவமாகத் தோன்றும். சிலர் நினைப்பது போல இரட்டைக் கோயிலாகவும் தெரியும். இந்த அமைப்பு கற்பணைக்கும் எட்டாத நவீனமானது. உள்ளே நுழைவதற்கு மூன்று திசைகளிலும் ஐந்து வாசல்களுண்டு. தலை வாயில் வழியாக ஆலயத்தினுள்ளே நுழையும் போது பரிசுத்த திருக்குடும்பம்: அன்பு மக்களே, உங்களது இதயத்தை எமக்குத் தந்திட உள்ளே வாருங்கள் என்று எழில் முகத்துடன் அழைக்கின்றது! அன்பு உணர்வூட்டும் காட்சியால் உள்ளே நுழைந்து பார்க்கும்போது பிரமிப்படைகின்றோம். எந்த ஆலயங்களிலும் கண்டிராத மிகவும் நுட்பகரமான வேலைப்பாடு ஆலய திருப்பீடம் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேர்முகமாகவே தெரியும். எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் பரலோக அன்னை உயிரோவியத்துடன் புன்சிரிப்புடன் நம்மையே நோக்குவது விசித்திரமானது.

அந்தக்காலம் பதனீர், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை போன்றவைகளை இணைத்து அரைத்துதான் பெரிய பெரிய கட்டிடங்களை எழுப்புவது இயற்கை. என்றாலும் இந்த அமைப்பில் கட்டுவது சாதாரண காரியமல்ல. வியக்கத்தக்க வானளாவிய வளைவுகள். (டூம்கள்) இவைகளைத் தாங்குவதற்கு உத்திரங்களோ, கட்டைகளோ அல்லது இரும்புகளோ இல்லை. இவைகள் இல்லாமல் இவ்வாறு கட்டப்பட்டிருப்பது ஆச்சரியம்!

alter-2

பீடத்தின் நடுவில் ஒரு பெரிய சிலுவையில் தொங்கும் தேவகுமாரன், “வாருங்கள் என்னருகில், தொட்டுப்பாருங்கள் என்னை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்று எம்பெருமான் உயிரோடு பேசுவது போல் காட்சியளிக்கிறார். ‘வருத்தத்தினால் பாரம் சுமக்கவில்லை, உங்களது பாவங்களையே பாரமாகச் சுமக்கிறேன்’ என்று சொல்லுவது தத்ரூபமாகவே உணர வைக்கிரது. அலையற்ற அருள்பிரகாசம் அவர் முகத்தில் ஓடுகின்றது. ஓடிக்கொண்டேயிருக்கின்றது.

பீடத்தில் நின்றடையும் படிகள் செங்குறுதி செம்மல் இயேசுகிறிஸ்துவின் 14 ஸ்தலங்ளை நினைவூட்டுகின்றன. பீடத்தின் நற்கருணை பேழையின் இருபக்கங்களிலும் இயேசு பெருமானின் பன்னிரு சீடர்களை நினைவுபடுத்தியுள்ளனர் (இப்போது சீடர்களின் சுரூபங்கள் பிளைவுட் பலகையால் மறைக்கப்பட்டிருக்கின்றன) பீடத்தின் மேல் வரிசையில் அமைந்திருக்கும் ஐந்து வளைவுகளும் மனுமகனாகப் பிறந்து சிலுவையில் அறையுண்ட யேசுபிரானின் ஜந்து காயங்களை நினைவு படுத்தியுள்ளனர். இதோடு இணைந்துள்ள கோபுரம் போன்ற ஒன்பது பூங்கொத்து சிலைகளும் ஒன்பது கூட்டம் சம்மனசுகளை நினைவுறுத்தியுள்ளனர். பீடத்தின் அடிவரிசையில் நான்கு வளைவுகளை அமைத்து நான்கு நற்செய்தி தூதுவர்களையும் நினைவுச்சின்னமாகவே அமைந்துள்ளனர் சுருங்கச்சொன்னால் ஒவ்வொரு பாகமும் வேதாகம் வரலாற்று உண்மையின் அடிப்படையில்தான் அழியாச் செல்வங்களாக நின்று அருள் ஒளி அளிப்பதற்கு வழி செய்துள்ளனர் என்பது மறைக்க முடியாத உண்மை.

alter-3

மட்டுமா… மணியோசையைக் கேளுங்கள்… சில ஆலயங்களில் பெரிய, பெரிய மணிக்கூண்டுகள் உண்டு. பல இணைந்து அடிப்பதுமுண்டு. ஆனால் இந்த ஆலயத்தின் மணி ஓசையில் இனிய நாதம் போன்று கேட்பதில்லை. இரட்டை மணிகளையும் இணைத்த அடிக்கும்போது அதன் இனிய நாதங்கொண்டு இரு கோபுரங்களின் மணிக்கூண்டை அணி செய்யும் இந்த மணிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். அன்று ஒலிக்கத் தொடங்கி இன்று வரை மக்களின் உள்ளங்களில் இறை உணர்வைப் பெருக்கிகய வண்ணமாகவே விளங்குகின்றது.