ஜாண்பிரிட்டோ என்ற அருளானந்தர் போர்த்துகல் நாட்டில் லிஸ்பன் நகரில் தந்தை சால்வதே தே பிரிட்டோ, தாய் டோனா ஆகியவர்களுக்கு 1647ம் ஆண்டில் பிறந்தார். கி.பி.1684 முதல் 1685 வரை காமநாயக்கம்பட்டியில் பங்குக் குருவாகப் பொறுப்பேற்று இறைபணியாற்றினார். அதன்பின்பு பங்குகளைக் கவனிக்கும் பொறுப்பு ஏற்று சீ;டராகப் பணியாற்றினார் 1686 வடக்கன்குளத்துக்கு வந்து ஆக்கப்பணிகளையும் கவனித்தார். இந்த ஊருக்கு ஒருசிறு கோயிலைக் கட்டிகொடுத்து மக்களை தெய்வீக வழியில் ஊக்குவித்தார். சந்தாயின் திருப்பணியும் விரிவடைந்தது. அருளானந்தரின் விசுவாசத் தென்றலும் வீச ஆரம்பித்தது. காமநாயக்கம்பட்டியின் கிளைக் பங்காக வடக்கன்குளத்தை நியமனம் செய்தார்.
நேமன் மி~னுடன் இணைப்பு
1708ஆம் ஆண்டு சங். சைமன் கார்வெல்லோ அடிகள் காலத்தில் இவ்வூரை மதப் போதங்கர்கள் தங்கும் இடமாகத் தெரிவு செய்துகொண்டனர். ஏனெனில் போதகர்கள் கொச்சியிலிருந்தும், காமநாயக்கம்பட்டி முதலிய இடங்களிலிருந்தும் வருபவர்கள் பலபாகங்களுக்கு போவதும் வருவதும் இவ்வழியே. ஐசமன் கார்வேல் சுவாமிகள் காலத்தில் காமநாயக்கனபட்டியின் கிளைப்பங்காக இருந்த வடக்கன்குளம் நேமன் பங்குடன் இணைக்கப்பட்டது. (அதாவது தென்னகத்தில் இறைபணி புரிவதற்கு ஒரு தனிப்பங்கு நேமன் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இணைக்கப்பட்டதுதான் வடக்கன்குளம்). வடக்கன்குளத்திற்கு கிளைப்பங்காக பொறுப்புகள் கொடுத்த போதிலும் சில மேல்மட்ட பொறுப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன.